Wednesday, February 20, 2013

வட மாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையங்களை நிறுவுவதற்கான நிகழ்ச்சி திட்டம்


நெனசல அறிவகம்  

வட மாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையங்களை நிறுவுவதற்கான நிகழ்ச்சி திட்டம்


இலங்கை,  நிகழ்ச்சி திட்டமானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் பொருளாதரத்தை அபிவிருத்தி செய்து வறுமையை ஒழித்து மக்களின்; வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சியாகும். "நெனசல-அறிவகம்" நிகழ்ச்சி திட்டமானது கிராமிய சமூகத்தை தகவல் தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். கிராமப் புறங்களின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை  வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நெனசல அறிவக நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தற்போது நாடு பூராகவும் 690 ற்கும் மேற்பட்ட நெனசல-அறிவக நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.


மேற்படி வட மாகாணத்தில் நெனசல அறிவக நிலையங்களை நிறுவுவதற்கான தகவல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான பரந்த திட்டத்தில் தங்களது சமூக சங்கங்களையும் நிறுவனங்களையும் இணைப்பதன் மூலம் உங்களது கிராமத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கலாம்​.


ஆர்வமுள்ள சமூக சங்கங்கள், சமூக நிறுவனங்கள் செயற்திட்டத்திற்கான ஆவணங்களை தங்களது பிரதேச செயலகத்துடன் அல்லது எமது நிறுவனத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.  www.icta.lk இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை ​குறித்த திகதிக்கு முன்னர் கீழ் காணும் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அல்லது நேரடியாக ஒப்படைக்கவும்.


கீழே குறிப்பிடப்பட்டுள்ள  பிரதேச செயலாளர், கிராம சேவகர் பிரிவில் வெற்றிகரமாக இயங்கும் சமூக சங்கங்களுக்கும் மற்றும் சமூக நிறுவனங்களுக்கும் முன்மொழிவு விண்ணப்பங்களை அனுப்ப முடியும். (கிராமிய அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், விளையாட்டு சங்கம் போன்ற பதிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு, அறக்கட்டளைகள், சபைகள், அமைப்புகள், பொது நூலகம், வணக்கஸ்தலங்கள் மற்றும் அனைத்து கிராம மேம்பாட்டு சமூக சங்கங்கள்)

மாவட்டம்
பிரதேச செயலாளர் பிரிவு
கி.சே. பிரிவு இல
கிராம சேவகர் பிரிவு
யாழ்ப்பாணம்
ஊர்காவற்துறை
J49
ஊர்காவற்துறை
சங்கானை
J162
அராலி தெற்கு
சண்டிலிப்பாய்
J146
பண்டத்தரிப்பு
J155
இளவாலை
தெல்லிப்ழை
J230
தந்தை செல்வபுரம்
உடுவில்
J196
சுன்னாகம் தெற்கு
கோப்பாய்
J268
நீர்வேலி தெற்கு
J285
அச்சுவேலி வடக்கு
கரவெட்டி
J353
உடுப்பிட்டி வடக்கு
பருத்தித்துறை
J401
பருத்தித்துறை
சாவகச்சேரி
J327
கொடிகாமம் மத்தி
J343
வரணி இயற்றாலை
J300
சாவகச்சேரி நகரம்
நல்லூர்
J114
திருநெல்வேலி மத்தி வடக்கு
J118
கோண்டாவில் மத்தி கிழக்கு
யாழ்ப்பாணம்
J69
றெக்கிளமேசன் மேற்கு
J87
மூர் வீதி வடக்கு
வேலணை
J10
அல்லைப்பிட்டி
நெடுந்தீவு
J3
நெடுந்தீவு மத்தி மேற்கு
காரைநகர்
J42
காரை கிழக்கு
கிளிநொச்சி
பச்சிலைப்பள்ளி
KN87
பளை நகர்
கண்டாவளை
KN57
புன்னைநீராவி
கரைச்சி
KN08
பாரதிபுரம்
பூநகரி
KN66
மட்டுவில்நாடு மேற்கு
முல்லைத்தீவு
மாந்தை கிழக்கு
MUL/09
பாண்டியன் குளம்
புதுக்குடியிருப்பு
MUL/41
புதுக்குடியிருப்பு மேற்கு
ஒட்டுசுட்டான்
MUL/75
திருமுறிகண்டி
கரைதுரைப்பற்று
MUL/103
முள்ளியவளை மேற்கு
வவுனியா
வவுனியா வடக்கு
225
கனகராயன்குளம் தெற்கு
வவுனியா தெற்கு
212C
அவுசதப்பிட்டி
வவுனியா
214E
பண்டாரிக்குளம்
215A
மகாரம்பைக்குளம்
218D
சாஸ்திரிகூழாங்குளம்
வெண்கலசெட்டிகுளம்
210
முதலியார்குளம்
மன்னார்
மன்னார் நகரம்
MN/65
எருக்கலம்பிட்டி கிழக்கு
MN/81
மூர் வீதி
மாந்தை மேற்கு
MN/22
அடம்பன்
மடு
MN/38
பெரிய பண்டிவிரிச்சான் மேற்கு
நானாட்டான்
MN/99
வங்காலை கிழக்கு
முசலி
MN/144
சிலாவத்துறை
 
   செயற்திட்டங்களை அனுப்ப வேண்டிய கடைசி திகதி : 27-02-2013

No comments:

Post a Comment