Thursday, April 11, 2013

“நாடு ‘சுறுசுறுப்பான இலங்கை’யை நோக்கி பயணிக்கிறது”



 நாடு ‘சுறுசுறுப்பான இலங்கை’யை நோக்கி பயணிக்கிறதென இலஙூகைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் நிறைவேற்றதிகாரி ரெஷான் தேவபுர தெரிவிக்கிறார்.
ஐபீஎம்மென்பொருள்உலகம் 2013 அல்லது ஐபீஎம் சொப்ட்வெயர் யூனிவர்ஸ் 2013 என்னும் நிகழ்வில் தலைமை விருந்தினராக தலைமை பங்குபற்றியபோதே இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் நிறைவேற்றதிகாரி ரெஷான் தேவபுர மேற்கண்டவாறு கூறினார்.
ஐபீஎம் மென்பொருள் உலகம் 2013 அல்லது ஐபீஎம் சொப்ட்வெயர் யூனிவர்ஸ் 2013 இம் மாதம் 19ந் திகதி கொழும்பில் சினமன் கிரான்ற் விடுதியில் இடம் பெற்றது. 
இலங்கையில் முதல் தடவையாக இடம் பெற்ற ஐபீஎம் மென்பொருள் உலகம் அல்லது ஐபீஎம் சொப்ட்வெயர்யூனிவர்ஸ் என்னும் நிகழ்வு ஐபீஎம் இலங்கை அல்லது ஐபீஎம் ஸ்ரீலங்காவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 
இந் நிகழ்வில் தலைமை விருந்துரையை வழங்கிய ரெஷான் தேவபுர அவர்கள் தற்போது நாடு தனிமையான தொழில்நுட்பத்திலிருந்து புத்தாக்கல் அல்லது இன்னொவேஷன் இதொழில் முனைவூ அல்லது என்ட்ரப்ரணஷிப் மற்றும் உட்சேர்க்கை அல்லது இன்க்ளுஷன் ஆகிய விடயங்கள் பால் கவனத்தைச் செலுத்திக்கொண்டு வருகிறது என்றார். இன்றைய உலகத்தின் போக்கின்படி நாம் இ சுறுசுறுப்பான இலங்கையை  அல்லது ஸ்மார்ட் ஸ்ரீலங்காவை உருவாக்குவதில் ஈடுபடவேண்டும் என்று அவர் மேலும் எடுத்துரைத்தார்.
படவிபரம் (9625) . 
இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் நிறைவேற்றதிகாரி ரெஷான் தேவபுர ஐபீஎம்மென்பொருள்உலகம் 2013 அல்லது ஐபீஎம் சொப்ட்வெயர்யூனிவர்ஸ் 2013 என்னும் நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு தலைமை உரையை வழங்குகிறார்.

No comments:

Post a Comment