இணைய உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரும் தாக்குதல்!: ஆடிப்போயுள்ள வல்லுனர்கள்
இணைய உலகமானது இதுவரை கண்டிராத பரந்தளவிலான தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். இது ‘biggest cyber attack in history’ வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப் பெரிய சைபர் தாக்குதல் என வர்ணிக்கப்படுகின்றது.
DDOS- Denial of Service attack எனப்படும் ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ அவை வழங்கும் சேவையை பயனாளிகள் பெறமுடியாத வகையில் முடக்க மேற்கொள்ளப்படும் சேவை மறுப்புத் தாக்குதலே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது இணையத்தின் 'DNS Domain Name System' என்று பரவலாக அறியப்படும் களப் பெயர் முறைமையை பாதிக்கத்தொடங்கியுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விளக்கமளிக்கின்றனர். இத்தகையவொரு பரந்தளவிலான தாக்குதலை இதுவரை இணைய உலகம் கண்டதில்லை என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் உலகலாளவிய ரீதியில் இணையத்தின் வேகம் நன்கு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கிடையிலான மோதலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. தேவையற்ற மின்னஞ்சல்களை 'Spam' தடுக்கும் நிறுவனமான Spamhausக்கும் , அத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் Cyberbunker க்கும் இடையேயே இடம்பெற்றுவரும் மோதலே தற்போது பூதாகரமாக உருவாகியுள்ளது.
'Spamhaus' என்பது லண்டன் மற்றும் ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட தேவையற்ற மின்னஞ்சல்களை தடைசெய்யும் இலாப நோக்கற்ற நிறுவனமாகும். Cyberbunker என்பது ஹோஸ்டிங் (Hosting) நிறுவனமாகும்.
Spamhaus நிறுவனமானது போலியான பொருட்களுகளுக்கு விளம்பரம் வழங்குதல் போன்ற(உதாரணம் வயகரா, எடைக்குறைப்பு மாத்திரைகள்) ஸ்பேம் மின்னஞ்சகளை அனுப்புதல் போன்ற தீய நோக்கங்களுக்காக செயற்படுத்தப்படும் சேர்வர்களை பட்டியலிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நிறுவனமானது Cyberbunker நிறுவனத்தினையும் அப்பட்டியலில் உள்ளடக்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும்முகமாக Cyberbunker நிறுவனம்மேற்கொண்ட நடவடிக்கை தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அது தற்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளதாகவும் இதுவே இணையத்தின் வேகம் குறையக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு நிறுவனங்களுக்கிடையேயான மோதல் தற்போது இணைய உலகினையே ஆட்டிப்படைக்கத்தொடங்கியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது இவ்விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மில்லியன் கணக்கானோர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வங்கிகளின் இணையம் சார்ந்த செயற்பாடுகள், மின்னஞ்சல் சேவை வழங்குனர்களின் செயற்பாடுகள் விரைவில் பாதிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு என்பது தொடர்பில் தொழிநுட்ப வல்லுனர்கள் திண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Source: http://www.virakesari.lk/article/technology.php?vid=167
No comments:
Post a Comment