`அனைத்து நெனசல-அறிவக உரிமையாளர்களும்,
"அறிவகங்களின் அங்கீகாரம்" 2013
தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து தகவல் மற்றும் தொடர்பாடல்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைதரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தினதும் வழிநடத்தலினதும் அடிப்படையில் அமுல்படுத்தப்படும் இ-இலங்கை தேசிய செயற்திட்டதின் ஓர் செயற்திட்டமே “நெனசல - அறிவகம்” செயற்திட்டம்.
தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து தகவல் மற்றும் தொடர்பாடல்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைதரத்தையும் மக்களையும் வலுப்படுத்திய அறிவகங்களின் உரிமையாளர் மற்றும் நடத்துனர்களுக்கான அவர்களால் அளிக்கப்பட்ட பங்களிப்பிற்கு ஓர் அங்கீகாரத்தை வழங்குவதற்காக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தால் "அறிவகங்களின் அங்கீகாரம்" தேசிய மாநாட்டை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
நெனசல - அறிவக உரிமையாளர் மற்றும் நடத்துனர்களை நாம் இவ் விழாவில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
திகதி மற்றும் நேரம்
|
2013 ஜூலை 26 – காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை
| |
பதிவு செய்தல்
|
காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரை மட்டும்
| |
நடைபெறும் இடத்தின் முகவரி
|
Mount Lavinia Hotel
No – 100
Hotel Road
Mount Lavinia
|
மவுண்ட் லவினியா ஹோட்டல்
இல - 100
ஹோட்டல் வீதி
கல்கிசை
|
மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தல் இணைப்பை 2013 ஜூலை 15 ஆம் திகதிக்கு முன் குறிப்பிட்டவாறு நிரப்பி எமக்கு தொலைநகலில் (011-2368387) அல்லது எனது மின்னஞ்சல் gavash@icta.lk முகவரிக்குஅனுப்பவும்.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள எம்மை தொலை பேசி இலக்கம்: 011-2369099 மூலமாக "நெனசல-அறிவகம்" செயற்குழுவை தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்
எஸ். கவாஸ்கர்
திட்ட முகாமையாளர்
தகவல் உற்கட்டமைப்பு
Best Regards,
S Gavashkar
Project Manager
Information Infrastructure
ICT Agency of Sri Lanka
*: 160/24, Kirimandala Mw., Col-5
(: +94-12369099, ext 343
No comments:
Post a Comment