Wednesday, May 8, 2013

ஒன்பது மாகாணங்களுக்கான அறிவக நிலையங்களின் அபிவிருத்தி மற்றும் மதிப்பிடுதல் கண்காணித்தலுக்கான பிராந்திய குழுவினை அறிமுகப்படுத்தல்


நெனசல-அறிவக நிலையங்களின் செயல்பாட்டில் வலுவான மேலாண்மையை வழங்குவதற்கும் தங்களது வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன்,  தங்களது முன்னேற்றத்தில்  புதிய முறைகளையும், புதிய எண்ணங்களையும் பல்வேறான பின்னணிகளைக் கொண்ட அறிவக இயக்குனர்கள் மற்றும் நடத்துனர்களை, ஆர்வமூட்டி உற்சாகப்படுத்தி  அறிவக நிலையங்களை வெற்றிப்பாதையில் பயணிப்பதற்கு வழிகாட்டுவதற்கும் தங்களது அபிவிருத்தியின் பங்குதாரர்களாக செயற்படுவதற்கு Colombo International Nautical & Engineering College (CINEC), Multi Tech Solutions Pvt. Ltd. மற்றும் Business Management Bureau Lanka (Pvt.) Ltd., ஆகிய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட குழு ஏப்ரல் மாதம் 2013 முதல் டிசம்பர்  2013  வரை பணியாற்றும். இக்குழுவினர் பின்வரும் குறித்த செயற்பாடுகளை நிறைவேற்ற தங்களது "அறிவக" நிலையத்திற்கு வருகைதருவர்;
  •  தகவல்கள் சேகரித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கல்
  • ஒவ்வொரு நெனசல-அறிவக நிலையத்திலும் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மீளாய்வு கூட்டங்களை நடத்துதல்
  • ஒவ்வொரு நெனசல-அறிவக நிலையத்திலும் அந்தந்த கிராம மக்களை கொண்டு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சமூகத்தை அமைப்பதன் மூலம் ஒர் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் சூழலை உருவாக்கல்


கீழ்வரும் பிராந்திய அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் இப்பொறுப்பினை ஏற்று நடத்துவார்கள்.

பெயர் / பதவி
பெயர் / பதவி
திரு. சந்திரசேன மாலியத்த 
குழுத்தலைவர் / செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு. தனேஸ்வரன் சத்தியநாதன் 
பிரதேச ஒருங்கிணைப்பாளர்வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்
திருமதி. பிம்பா குணதிலக்க
சமூகவியலாளர்
திரு. R.A.T.D. ரணசிங்க 
பிரதேச ஒருங்கிணைப்பாளர் - ஊவா மாகாணம் 
திரு B.L. ராமநாயக்க -
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அதிகாரி
திரு. J.A. சமந்த ஜயசிங்க 
பிரதேச ஒருங்கிணைப்பாளர் - வடமேல் மாகாணம் 
திரு. D.M.N. தீலிப திசாநாயக்க  -
பிரதேச ஒருங்கிணைப்பாளர் - மத்திய மாகாணம் 
திரு. A.M. பிரியந்த அரியதிலக  -
பிரதேச ஒருங்கிணைப்பாளர் சபரகமுவா மாகாணம்
திரு. K.H. ஜனக சந்திமல் காரியவசம்  -
பிரதேச ஒருங்கிணைப்பாளர் - மேல் மாகாணம்
திரு. W.A. அனுர பிரதீப் குமார  -
பிரதேச ஒருங்கிணைப்பாளர் - வடமத்திய மாகாணம் 
திரு. B.M. நிலக அவந்த்த
பிரதேச ஒருங்கிணைப்பாளர் -  தென் மாகாணம் 
தங்களது கிராமத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துவதற்கும் இக்குழுவினரின் கடமையை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கும் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன்  கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு நாம் இனிவரும் காலங்களில் தங்களது நெனசல-அறிவக நிலையத்திற்கு மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடக இணைப்புகள் மூலமாக மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்வோம் என்பதனை இதன் மூலம் தெரிவித்க்கொள்கின்றோம். தங்களது மின்னஞ்சல் முகவரி எமது குழு மின்னஞ்சலில் (nenasala group mail) அல்லது சமூக ஊடக இணைப்புகளில் இல்லாவிடில் தங்களது மின்னஞ்சல் முகவரியை gavash@icta.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளவும்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்



எஸ். கவாஸ்கர்
திட்ட முகாமையாளர்
தகவல் உற்கட்டமைப்பு

No comments:

Post a Comment