Sunday, March 10, 2013

"அறிவகங்களின் அங்கீகாரம் - சுவர்ண விருது" 2013


"அறிவகங்களின் அங்கீகாரம் - சுவர்ண விருது" 2013

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கை தரத்தையும்  மக்களையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தினதும் வழிநடத்தலினதும் அடிப்படையில் அமுல்படுத்தப்படும் செயற்திட்டமே “நெனசல - அறிவகம்செயற்திட்டம். அன்று முதல் இன்று வரை நெனசல அறிவக நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 690 ற்கும் மேற்பட்ட நெனசல-அறிவக நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டில் பல சாதனைகளுடன் எட்டாவது ஆண்டில் கால் பதிக்கும் “நெனசல-அறிவகம்செயற்திட்டத்தின் நோக்கத்தை அடைவதற்காக நெனசல-அறிவக வளர்ச்சியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, சிறப்பாக பங்களித்த உரிமையாளர் மற்றும் நடத்துனர்களை கௌரவிப்பதற்காகவும் அவர்களால் அளிக்கப்பட்ட பங்களிப்பிற்கு ஓர் அங்கீகாரத்தை வழங்குவதற்காக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வே "அறிவகங்களின் அங்கீகாரம் - சுவர்ண விருது" விழாவாகும்.
 
பின்வரும் பிரிவுகளில் மொத்தமாக 50 விருதுகள் வழங்கப்படும். அனைத்து நெனசல-அறிவக உரிமையாளர்களும் மற்றும் நடத்துனர்களும்  "அறிவகங்களின் அங்கீகாரம் - சுவர்ண விருது" நிகழ்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.

1.   பேராசிரியர் வீ.கே.சமரநாயக்க ஞாபகார்த்த விருது

2.   தேசிய அளவிலான சிறந்த செயல் திறமைக்கான விருது

3.   மாகாணத்தில் சிறந்த செயல் திறமைக்கான விருதுகள்

4.   மாவட்டத்தில் சிறந்த செயல் திறமைக்கான விருதுகள்

5.   சிறப்பு விருதுகள்

6.   மக்கள்  விருது 

பேராசிரியர் வீ.கே.சமரநாயக்க ஞாபகார்த்த விருது ஒன்றும், தேசிய அளவிலான சிறந்த செயல் திறமைக்கான விருது ஒன்றும், மாகாண மட்டத்தில் சிறந்த செயல் திறமைக்கான விருதுகள் ஒன்பதும்,  மாவட்ட மட்டத்தில் சிறந்த செயல் திறமைக்கான விருதுகள் இருபத்தைந்தும் மற்றும் சிறப்பு விருதுகள் பதினான்கு விருதுகளும் முறையே வழங்கப்படும்.

www.nenasalapranama.lk என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் இந் நிகழ்வில் பங்கேற்க முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 2013 ஏப்ரல் 05 ஆம் திகதி அல்லது அதற்கு முன் nenasala.helpdesk@icta.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்களிடம் இணையவசதி இல்லை என்றால் அருகிலுள்ள இணையவசதி இருக்கும் நெனசல-அறிவகத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கவும். (தபாலில் அனுப்புவதிலிருந்து தவிர்க்கவும்)
 
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள எம்மை தொலை பேசி இலக்கம்: 011-2369099 அல்லது மின்னஞ்சல் : nenasala.helpdesk@icta.lk மூலமாக "நெனசல-அறிவகம்" செயற்குழுவை தொடர்பு கொள்ளவும்.
 
நெனசல-அறிவக உரிமையாளர் மற்றும் நடத்துனர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சலிக்காத முயற்சியையும் அங்கிகரிக்கும் நிகழ்வாக இடம்பெறும் மற்றும் தாங்கள் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்.

நன்றி

No comments:

Post a Comment