Wednesday, February 27, 2013

மைக்ரோசொப்ட் தனது இணையவழி உரையாடல் சேவையான 'லைவ் மெசென்ஞரை' எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி முதல் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

லைவ் மெசென்ஞருக்கு பதிலாக அதன் பாவனையாளர்களை ஸ்கைப்பிற்கு நகர்த்துவதற்கு மைக்ரோசொப்ட் எதிர்ப்பார்த்துள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனமானது ஸ்கைப் சேவையினை 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு கொள்வனவு செய்தது.
எனவே தனது 'லைவ் மெசென்ஞர்' பாவனையாளர்களை ஸ்கைப்பிற்குள் கொண்டுவருவதற்கு மைக்ரோசொப்ட் முடிவு செய்தது.

இதனையடுத்து 'லைவ் மெசென்ஞர்' சேவையை நிறுத்தப்போவதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இதற்கான தினத்தை தற்போது அறிவித்துள்ளது. 
'லைவ் மெசென்ஞர்' சேவையினை மாதாந்தம் சுமார் 300 மில்லியன் பேர் வரை தற்போது பாவித்து வருவதாக மைக்ரோசொப்ட்  தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் மைக்ரோசொப்ட் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு.

எனினும் இச்சேவையானது சீனாவில் வழமை போல இயங்கவுள்ளது.
மேலும் லைவ் மெசென்ஞரில் உள்ள தொடர்புகளை ஸ்கைப்பில் பெற்றுக்கொள்ள முடியும் என மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment